முப்பதுவெட்டி வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை;
ராணிப்பேட்டை மாவட்டம் முப்பதுவெட்டி அருகே ஸ்ரீவாராஹி அம்மன் கோயிலில் இன்று (செப்.6) காலை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சந்தனம், குங்குமம் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.