வாலாஜா-சோளிங்கர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்ககோரிக்கை
வாலாஜா-சோளிங்கர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்ககோரிக்கை;
வாலாஜா சோளிங்கர் சாலை காவலர் குடியிருப்பு அருகில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.