உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ;

Update: 2025-09-06 10:06 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார். இதில் பல்வேறு கோரிக்கை விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வுகாண ஆலோசனைகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆப்பூர் சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், வனக்குழுத்தலைவர் வி.ஜி.திருமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி,ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத்தலைவர்,துறைச் சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Similar News