சோளிங்கர் நரசிம்மர் கோவில் நடை இன்று அடைப்பு!
சோளிங்கர் நரசிம்மர் கோவில் நடை இன்று அடைப்பு!;
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 இன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்.