அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா

அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா;

Update: 2025-09-07 14:41 GMT
சிறுவங்குணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் சுவாமி உடனுறை அகிலாண்டநாயகி அம்மை ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா. செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த சிறுவங்குணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் சுவாமி உடனமர் அகிலாண்டநாயகி அம்மை ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை,கோ பூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், உள்ளிட்ட பூஜாளுடன் நன்னீராட்டு பெருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு செய்து கோவில் உட்பிரகாரம் வளம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நன்னீராட்டு பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News