விண்ணமங்கலம், தச்சூர் கோயில்களில் புதிய தேர் அமைக்கும் பணி துவக்கம். ஆரணி எம்.பி துவக்கி வைத்தார்.

ஆரணி அடுத்த விண்ணமங்கலம் வஞ்சியம்மன் கோயிலிலும், தச்சூர் பிச்சீஸ்வரர் கோயிலிலும் புதிய தேர் அமைக்கும் பணியினை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார்.;

Update: 2025-09-07 17:38 GMT
ஆரணி அடுத்த விண்ணமங்கலம் வஞ்சியம்மன் கோயிலிலும், தச்சூர் பிச்சீஸ்வரர் கோயிலிலும் புதிய தேர் அமைக்கும் பணியினை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். ஆரணி அடுத்த விண்ணமங்கலம் அருள்மிகு மஞ்சியம்மன் ஆலயத்தில் ரூ.47.43 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணியினை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். மேலும் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள பிச்சேஸ்வரர் கோயிலில் ரூ. 37.80 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணியினை ஆரணி எம்.பி துவக்கி வைத்தார்.உடன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் துரைமாமது, சுந்தர், மோகன், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளர் வ.மணிமாறன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News