நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது!

கோவில்பட்டியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். ;

Update: 2025-09-08 03:59 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வீசி வெடிக்கச் செய்து, அந்தக் காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இன்ஸ்டாகிராமில் இளைஞா்கள், இளஞ்சிறாா்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் வந்தது.  இதன் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இலுப்பையூரணி மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாரை (23) என்பவரை கைது செய்தனர்.

Similar News