ராணிப்பேட்டையில் செல்போன் திருடிய வாலிபர் கைது!

செல்போன் திருடிய வாலிபர் கைது!;

Update: 2025-09-08 05:53 GMT
ராணிப்பேட்டை பஜார் வீதியில் காலணி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருபவர் காஜாமொய்தீன். கடந்த 3-ந் தேதி, காலணிகளை வாங்குவது போல் விளாப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்த வினோத் (40) என்பவர் வந்தார். பின்னர் காலணிகளை பார்த்து கொண்டி ருந்த போது, கடையில் சார்ஜ் போடப்படடிருந்த கடை உரிமையாளரின் செல்போனை திருடி உள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் காஜா மொய்தீன் கண்காணிப்பு காட்சிகள் அடங்கிய பதிவுடன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செல் போன் திருடிய வினோத்தை கைது செய்து, செல்போனை மீட்ட னர். பின்னர் வினோத்தை ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி வாலாஜாபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News