மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்;

Update: 2025-09-08 09:03 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மத்திய மான்விளை கிராமத்தில் வண்ணார் சமுதாயத்தைச் கந்தசாமி மற்றும் அவரது 11ஆம் வகுப்பு மாணவனை குலத் தொழில் செய்ய வேண்டும் கோயிலுக்குள் வரக்கூடாது என சிலர் வன்கொடுமை செய்ததை கண்டித்தும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமென கட்டாயப்படுத்தும் நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் கட்டாய குடி ஊழியத்தை தமிழக அரசு ஒளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தேசிய சமூக நீதி கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் கைது பரபரப்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மத்திய மான்விளை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது மகன் ஆகியோரை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் நீங்கள் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் உங்களுடைய குடி தொழிலை செய்ய வேண்டும் கோயிலுக்குள் மற்றும் குளத்திற்கு வரக்கூடாது கோயிலுக்கு குளத்திற்கு வந்தால் தீட்டு என்று கூறி வன்கொடுமை செய்ததுடன் அவர்களை ஊரின் பொது இடத்தில் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டுமென கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் மிரட்டல் விட்ட நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தேசிய சமூக நீதி கட்சி தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் இந்த வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் தென் மாவட்டங்களில் ஜாதியை வன்கொடுமைகளும் ஆணவ படுகொலைகலும் அரங்கேறும் இந்த சூழலில் மாவட்ட நிர்வாகம் காவல் துறையும் இது போன்ற செயல்களை தடுக்காமல் துணை போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் தமிழக அரசு குலத்தொழிலை கட்டாயம் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்

Similar News