தேசிய புலனாய்வு அமைப்பினர் வடமாநில தொழிலாரிடம் விசாரணை

தூத்துக்குடியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் வடமாநில தொழிலாரிடம் விசாரணை நடத்தினர்;

Update: 2025-09-08 09:49 GMT
தூத்துக்குடி சென்னையில் நக்சல் அமைப்புடன் தொடர்புடைய ஒரு நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்த நிலையில் அவரிடம் தொடர்பு இருந்ததாக சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக வந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்பீக் ஆலம் உள்ளிட்ட மூன்று வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை பரபரப்பு தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் நக்சல் அமைப்பு மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்தனர் அவரிடம் சோதனை செய்ததில் அவருடைய செல்போனில் முஸ்பிக் ஆலம் என்ற நபரின் செல்போன் தொடர்பு எண் பதிவு ஆகி இருந்தது இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர் இதில் முஸ்பிக் ஆலம் தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்துள்ளார் என தெரியவந்தது இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் இன்று தூத்துக்குடி சிலுவைப் பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர் அதில் ஒரு அறையில் முஸ்ப்பிக் ஆலம் உள்ளிட்ட 7 பேர் தங்கி இருந்து பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இவர்கள் பீகார் மாநிலம் பூரணியா மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் அவர்கள் தங்கி இருந்த அறை முழுவதையும் சோதனை செய்தனர் மேலும் அவர்களின் உடைமைகள் பொருட்கள் ஆகியவற்றையும் சோதனை செய்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கை எதுவும் உள்ளதா அல்லது தீவிரவாத அமைப்பு நக்சல் அமைப்பு யாரிடம் தொடர்பில் உள்ளனரா என விசாரணை நடத்தினர் இதில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என தெரியவந்தது இதைத்தொடர்ந்து மத்திய உளவு அமைப்பு காவல்துறையினர் குடிசை மாற்று வாரிய பகுதியில் சோதனை செய்ததுடன் அங்கே தங்கி இருந்த முஸ்பிக்ஆலம் மற்றும் மற்ற 2 நபர்கள் என மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர் இந்த விசாரணைக்கு பின்பு மத்திய உளவு பிரிவு காவல் துறையினர் முஸ்பிக்ஆலம் மற்றும் அவருடன் அறையில் தங்கி இருந்த இரண்டு நபர்களை தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர் தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று வாலிபர்களிடம் மத்திய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மத்திய உளவு பிரிவு காவல்துறை தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Similar News