குறைதீர்வு கூட்டத்தில் முன்னாள் அலுவலர் மனு அளிப்பு!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் சத்துவாச்சாரியை சேர்ந்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் வந்து தனது கோரிக்கையை மனு அளித்தார்.