பேருந்து நிலையத்தில் செல்போன் திருட முயற்சி-இருவர் கைது!
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் திருட முயற்சி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று கொணவட்டத்தைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம் செல்போனை திருட முயற்சித்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தாஸ் புளு (28) மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாலமன் ராஜு (27) ஆகிய இருவரையும், பொதுமக்கள் உடனடியாக பிடித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் வழங்கினர்.அதன்பேரில் வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.