டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி தவெக சார்பில் மனு.
ஆரணி புதியபஸ்நிலையம் அருகில் காந்திரோடில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றதில் தவெக சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
ஆரணி புதியபஸ்நிலையம் அருகில் காந்திரோடில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றதில் தவெக சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றதில் கோட்டாட்சியர் சிவா தலைமை தாங்கினார். இக்கூட்ட\த்தில் ஆரணி புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் சாலையான காந்திரோடில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி தவெக சார்பில் மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் கோரிக்கை மனுவினை கோட்டாட்சியரிடம் கொடுத்தனர். இம்மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆரணி காந்திரோடில் உள்ள மதுக்கடையால் தினசரி பயணிகள், பெண்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குடி போதையில் அடிக்கடி தகராறு, பள்ளி மாணவிகளை சீண்டுதல், என பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படுகிறது. என அக்கடையை அங்கு இருந்து அகற்றுமாறு கேட்டு்கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தது. உடன் கட்சியினர் இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், உட்பிரிவு, ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, உட்பிரிவு ரத்து, வேகத்தடை அமைத்துதரக்கோரி,இலவச வீடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 70 மனுக்கள் வரப்பெற்றது. இம்மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.