ஆற்காடு அருகே பொதுமக்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது

பொதுமக்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது;

Update: 2025-09-09 03:57 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏரிக் கீழ் தெருவில் சேது என்பவர் ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறி பான்கார்டு, ஆதார்கார்டு போன்ற விவரங்களை வாங்கி கையொப்பமும் வாங்கிக்கொண்டு நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விற்று தவணையை கட்டாமல் இருந்துள்ளார். நிறுவன உரிமையாளர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் உண்மையை கூற சேதுவை போலீசார் கைது செய்தனர்.

Similar News