ஆற்காட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்காட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை;
ஆற்காடு பார்த்திபன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், மேஸ்திரி. இவரின் மனைவி நீலா (வயது 30). நேற்று வெங்கடேசன் வேலைக்குச் சென்று விட்டார். அவரின் பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்று விட்டார்கள். மதிய உணவுக்காக வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக் கதவின் தாழ்ப்பாள் உள்பக்கமாகப் போடப்பட்டு இருந்தது. கதவை திறக்குமாறு வெங்கடேசன் நீண்ட நேரம் தட்டிப்பார்த்தார். ஆனால், கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நீலா சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து மேஸ்திரி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.