மஞ்சக்குப்பம்: சிறப்பு மருத்துவ முகாம்
மஞ்சக்குப்பம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவ மழை மற்றும் பேரிடர் சிறப்பு மருத்துவ முகாம் மஞ்சக்குப்பம் பகுதி தீன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் பரித்தவாணி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.