உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க வேண்டி மக்கள் கோரிக்கை

உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க வேண்டி மக்கள் கோரிக்கை;

Update: 2025-09-09 09:03 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோவில் பாலுார் சாலை 10 கி.மீ., நீளமுடையது. இந்த சாலையை தெள்ளிமேடு, கொளத்தூர், வெங்கிடாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் மறைமலை நகர் நகராட்சி எல்லையில் கடந்த 2015ம் ஆண்டு நகராட்சி சார்பில் மக்கள் கோரிக்கையை ஏற்று உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அச்சமின்றி சென்று வந்தனர். இந்த உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாததால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பணி முடிந்து இரவு வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News