தலைமையாசிரியர்களை ஊக்குவித்த ஆட்சியர்
சிவகங்கையில் நூற்றாண்டு கண்ட பள்ளி தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சியர் ஊக்குவித்தார்;
சிவகங்கை மாவட்டத்தில் நூற்றாண்டு கண்ட 17 அரசு பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்களை ஊக்குவித்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, சிங்கம்புணரி ஒன்றியம், பிரான்மைைல தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் பங்கேற்றனர்