சிவன் கோவில் வருஷாபிஷேகம் பரிவார மூர்த்திகள் வீதி உலா
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்;
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய வருஷாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி விநாயகர் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் காட்சியளித்தனர் பின்னர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.