ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி கோரிக்கை.
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றதில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.;
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றதில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் ஆரணி கோட்டாட்சியர் சிவா தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் புஷ்பா அனைவரையும் வரவேற்றார். ஆரணி வட்டாட்சியர் கௌரி, ஆரணி வட்டவழங்கல் அலுவலர் எஸ்.அரிக்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும். மேலும் சிலர் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறார்கள் என்றும், ஆரணி அடுத்த தச்சூர் ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும், பட்டா, சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். மேலும் விவசாயிகள் கொடுத்த கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அதனையும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். என்று பேசினார். மேலும் இதில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் பகுதி வேளாண்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்வதுறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வங்கித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.