வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு கூட்டம்!
வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு குறித்து அனைத்து கட்சியினருடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.;
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் லட்சுமணன் தலைமையில் வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு குறித்து அனைத்து கட்சியினருடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் 31 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு மற்றும், இறப்பு, இருமுறை பதிவு, இடமாற்றம் ஆகியவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மேயர் சுஜாதா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.