சொத்து வரி உடனடி பெயர் மாற்றம் !
உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி சொத்து வரி பெயர் மாற்றம் கோரி மனு அளித்த பயனாளிக்கு பெயர் மாற்ற ஆணையினை வழங்கினார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி, பேர்ணாம்பட்டு ரோடு சுந்தரர் மஹாலில் இன்று (செப் 10) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி சொத்து வரி பெயர் மாற்றம் கோரி மனு அளித்த பயனாளிக்கு பெயர் மாற்ற ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையர் உட்பட பலர் உடனிருந்தனர்.