ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது,

ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது;

Update: 2025-09-11 05:18 GMT
ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் யாகசாலை அமைத்து புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் ஊற்றி யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கணபதி ஓமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி என சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து இன்று கோ பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி என நான்கு கால சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் கலசத்தில் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றன. இதில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பெண்கள் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷங்கள் முழங்க வழிபட்டனர். இந்த விழாவில் விழாக்குழுவினர் கோவில் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News