தேனி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து தலை சிக்கி கொடூர பலி

விபத்து;

Update: 2025-09-11 11:11 GMT
ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன். டிப்பர் லாரி ஓட்டுநர் இவர்.நேற்று(செப்10)வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்றார் .வானவியல் கல்லூரி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. ஓட்டுனரின் தலை லாரியில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைகை அணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News