விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கீதா தலைமை தாங்கினார். அப்போது சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறியும் விவசாயிகள் வலியுறுத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.