மருத்துவக் கல்லூரியில் ஊட்டச்சத்து கண்காட்சி!
குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, அத்தி செவிலியர் கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, அத்தி செவிலியர் கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது. அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் பி.சௌந்தரராஜன் தலைமையில், இயற்கை உணவு உட்கொள்வது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறினார். வித்யாலட்சுமி கல்விக் குழும தலைவர் எஸ். அசோக்குமார் அரங்குகளை திறந்து வைத்தார்.