குடியாத்தத்தில் ஆயுத பூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்!
எல்.பி எஃப் ஆட்டோ சங்கத்தின் அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விழா சிறப்பு கூட்டம் ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்.பி எஃப் ஆட்டோ சங்கத்தின் அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விழா சிறப்பு கூட்டம் ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர திமுக செயலாளர் எஸ்.சௌந்தர்ராசன் உரை நிகழ்த்தினார். ஆயுத பூஜை மற்றும் அண்ணா பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் கூறினார். இதில் நகர நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.