ஓசூர்:காரில் கர்நாடக மது பாட்டில், புகையிலை கடத்தியவர் கைது

ஓசூர்:காரில் கர்நாடக மது பாட்டில், புகையிலை கடத்தியவர் கைது.;

Update: 2025-09-11 23:53 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 36 கர்நாடக மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மது மற்றும் புகையிலை பொருட்களை வாங்கி, விழுப்புரத்திற்கு விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதை அடுத்து பெங்களூரு கரப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சதீஷ்(29) டிரைவரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News