கெலமங்கலம்:டூவீலரில் வைத்த பணத்தை திருட்ட முயன்றவர் கைது.

கெலமங்கலம்:டூவீலரில் வைத்த பணத்தை திருட்ட முயன்றவர் கைது.;

Update: 2025-09-12 00:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேஷ் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (56) இவர் நேற்று கெலமங்கலத்தில் உள்ள வங்கியில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது டூவீலர் டிக்கியில் வைத்துவிட்டு கெலமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நிறுத்தி விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட 4 பேர் டிக்கியில் இருந்த அந்த பணத்தை திருடிய போது அதை பார்த்த நாகராஜ் சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் 4 பேரும் தப்பினர். இதில் ஒரு நபரை மட்டும் பொதுமக்கள் பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் குப்பம் அடுத்த ஒஜிகுப்பம் கிராமம் பாண்டு ரங்கன் (44) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து, தப்பி ஓடிய மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News