ஓசூரில் கடையில் இருந்த பொருட்களை வீசியவர் மீது வழக்கு பதிவு.
ஓசூரில் கடையில் இருந்த பொருட்களை வீசியவர் மீது வழக்கு பதிவு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் இவர் பாகலூர் சாலையில் உள்ள கிஷோர் குமார் (45) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இந்நிலையில் கடையை காலி செய்யுமாறு கட்டிடத்தில் உரிமையாளர் கூறியுள்ளார். சில மாதங்கள் அவகாசம் கொடுக்குமாறு கோபிநாத் கேட்டுள்ளார். இதனிடையே நேற்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் இருந்த கணினி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடையிலிருந்து கிஷோர் குமார் தூக்கி வெளியில் வீசியுள்ளார். இதுதொடர்பாக அட்கோ காவல் நிலையத்தில் கோபிநாத் புகார் செய்தார்.போலீசார் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.