அரக்கோணம் அருகே தாய் மகன் தற்கொலை!

அரக்கோணம் அருகே தாய் மகன் தற்கொலை!;

Update: 2025-09-12 04:49 GMT
அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மதன சேகர் (54). விபத்தில் சிக்கியதால், தன்னை கவனிக்க யாரும் இல்லாத மனவேதனையில், தனது தாயார் புனிதவதி (72) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்னையில் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News