ரத்தினகிரி அருகே பஸ் தடுப்பு வேலி மீது மோதி விபத்து

பஸ் தடுப்பு வேலி மீது மோதி விபத்து;

Update: 2025-09-12 04:58 GMT
ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ் சாலையை ஒருவர் கடப்பதற்காக தடுப்பு வேலி அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக ஓசூரில் இருந்து பயணி களை ஏற்றி கொண்டு சென்னையை நோக்கி வந்த ஒரு அரசு பஸ் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடக்க முயன்றவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலை தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு தடுப்புச்சுவரில் ஏறிநின்றது. அதில் சாலையை கடக்க முயன்றவர் காயம் அடைந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் சாலை தடுப்புச்சு வர் மீது இருந்த இரும்பு வேலி உடைந்து சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News