கரூர்-இமானுவேல் சேகரனாருக்கு விசிக கட்சி சார்பில் வீரவணக்கம்.

கரூர்-இமானுவேல் சேகரனாருக்கு விசிக கட்சி சார்பில் வீரவணக்கம்.;

Update: 2025-09-12 07:40 GMT
கரூர்-இமானுவேல் சேகரனாருக்கு விசிக கட்சி சார்பில் வீரவணக்கம். விடுதலைப் போராட்ட வீரரும் முன்னாள் ராணுவ வீரருமான இமானுவேல் சேகரனார் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டுகரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள பெரியார் சிலை முன்பு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன் தலைமையில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் அக்கினி இல அகரமுத்து முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன் மாநில வணிகர் அணி துணைச் செயலாளர் கண்மணி ராமச்சந்திரன் கரூர் மேற்கு மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா நகரத் துணைச் செயலாளர் ஜவகர் மாநகர் மாவட்ட பொருளாளர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக இருந்த இமானுவேல் சேகரனுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

Similar News