வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-09-12 08:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள ஆண்டியூரை சேர்ந்தவர் கண்ணன் (70) கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 23-ம் தேதி அன்று கல்லாவி அம்பேத்கர் நகரில் உள்ள தன் மகளின் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. பின்னர் அருகில் இருந் தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News