பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை ஆய்வு!
பேரணாம்பட்டு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர் 12) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜூபேர் அஹ்மத், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.