குடியாத்தத்தில் இலவச மருத்துவ முகாம்!
குடியாத்தம், தென்குளக்கரையில் தனியார் கல்லூரி சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தென்குளக்கரையில் தனியார் கல்லூரி சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவரும், திமுக செயலாளருமான எஸ். சௌந்தர்ராசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் ஜாவித் பாய் மற்றும் முஷிரா இர்பான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.