அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களான டைரி, காசோலைகள், பாஸ்புக், செக்புக், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.