பல்லடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்

பல்லடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-09-13 05:01 GMT
பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் க.அய்யம்பாளையம் ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதற்கு பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பல்லடம் மின்கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் வக்கீல் எஸ்.குமார், கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் நா.சோமசுந்தரம், தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சுரேஷ் வரவேற்றார். பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 1,431 மனுக்கள் பெறப்பட்டது. இதில், சுக்கம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதசலமூர்த்தி, இளைஞர் அணி ராஜேஸ்வரன், க.அய்யம்பாளையம் ஊராட்சி செயலர் கந்தசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News