தேனி அருகே போடி தாலுகா போலீஸ் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று(செப்.13) விஸ்வநாதபுரம் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சேர்மலை மற்றும் வேல்முருகன் இருவரும் அவரது வீட்டில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது ,இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.