தேனி அருகே தேவதானப்பட்டியில் வீட்டில் வைத்து புகையிலை விற்றவர் கைது
கைது;
தேனி தேவதானப்பட்டியில் போலீசார் நேற்று குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் அவரது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக தெரியவந்தது .அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து காவல்துறையினர் மாடசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.