திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் பொறுப்பேற்பு
திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா. கௌதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.;
திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா. கௌதம் பொறுப்பேற்றுக் கொண்டார். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த ரா. கௌதம், பதவி உயர்வு பெற்று கோட்டாட்சியராக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பழைய கோட்டாட்சியர் சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.