தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் தனது நண்பர் சரவணனுடன் டூவீலரில் திருச்சி நோக்கி மாத்தூர் அருகே திருச்சி ரிங் ரோடில் வந்தபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததில் இருவரும் கீழேவிழுந்து படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் பிரகாஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணன் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து மாத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.