ஆலங்குடி அருகே நகரம் மாங்காடு பிரிவு ரோடு முக்கத்தில் நேற்று கீரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வடகாடு புள்ளாட்சி குடியிருப்பை சேர்ந்த வீரய்யா (81) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.