பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) பால் கட்டளை பகுதியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தனர்.