தேனி சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் தீபா (40) இவரது மகன் பத்தாம் வகுப்பு படித்து வரக்கூடிய நிலையில் சரிவர படிக்காத காரணத்தினால் பள்ளியில் தேர்வு எழுத வேண்டாம் என கூறியுள்ளனர். மகனின் வாழ்வை நினைத்து மன உளைச்சலில் இருந்த தீபா நேற்று (செப் 14) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.