வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது சிமெண்ட் கல் தூண் விழுந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழப்பு
சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழப்பு;
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிராமம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன் - அன்னலட்சுமி இவர்கள் இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர் .இவர்களுக்கு நான்கு வயதில் அஜித்தா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. தம்பதியினர் இருவரும் பணிக்கு செல்லும் போது தங்களது குழந்தையை வீட்டு அருகே உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்று வந்துள்ளனர் .இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலை கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று இருந்த போது கோபாலகிருஷ்ணனின் உறவினனான வேலுச்சாமி என்பவர் இடத்தில் கொட்டகை அமைப்பதற்காக இரண்டு கல் துணிகள் அமைக்கப்பட்டு அதன் நடுவே கயிறு கட்டப்பட்டு போர்வை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்குச் சென்று அதனை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அஜித ஸ்ரீ மீது திடீரென சிமெண்ட் தூண்கள் உடைந்து விழுந்ததில் தலை,மூக்கு உள்ளிட்ட பகுதிகளை படுகாயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தால் காயங்களுடன் கிடந்த சிறுமியை மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிறுமையை அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்தார் .வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி உடைந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.