புதுகை: பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

விபத்து செய்திகள்;

Update: 2025-09-15 10:58 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கு குமார் (30) பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் மார்க்கெட் சாலையில் அவருக்கு எதிரே டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கணேசமூர்த்தி (24) மோதியதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News