பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று 16 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், சாமியார் பேட்டை, பூவாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.