பெற்றோர் இழந்து பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், 'அன்புக்கரங்கள்' திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.