நெல்லை மாநகர சுத்தமல்லி ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக உத்தரவு ஆணையை சுத்தமல்லி மின் பகிர்மான வட்ட உதவி பொறியாளர் வேலுச்சாமி வழங்கினார். இந்த நிகழ்வின்போது மானூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீகாந்த்,கிராம ஊராட்சி ராஜேஸ்வரர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.